2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

பரவிப்பாஞ்சான் காட்டுப்பகுதியில் நுழைந்த நால்வர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் காட்டுப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் 04 பேரை  பொலிஸார், திங்கட்கிழமை (01) மாலை கைதுசெய்துள்ளனர்.

குறித்த காட்டுப்பகுதியில் புதையல் தோண்டுவதாக தமக்குக் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அக்காட்டுப்பகுதியை சுற்றிவளைத்து தாம் தேடுதல் நடத்தியதாகவும் இதன்போது, ஒரு பௌத்த பிக்குவும் ஒரு சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தரும் உட்பட 04 பேரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கான ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லையெனக் கூறிய பொலிஸார், திசையை அறிந்துகொள்வதற்கான வரைபடமொன்றைக்  கைப்பற்றியதாகவும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .