Niroshini / 2015 நவம்பர் 10 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, குச்சவௌி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த நபரொருவருக்கு நேற்று திங்கட்கிழமை மாலை திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான் மீ கஹகே எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
குச்சவௌி ,பள்ளவக்குளத்தைச் சேர்ந்த ஏ.எம்.ஜம்புக்கான் (வயது 37) என்பவருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
குச்சவௌி,பள்ளவக்குளத்தைச் சேர்ந்த தகப்பனின் சகோதரரை தாக்கி காயப்படுத்தியமை, பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஜாயா நகர் பகுதியிலுள்ள நபரொருவரின் மாட்டின் பின் காலை வெட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த நபர் நீண்டகாலமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தார்.
இதேவேளை, இவருக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்தில் 05 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குச்சவௌி பொலிஸ் நிலையத்தில் 09 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
52 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago