2026 மார்ச் 23, திங்கட்கிழமை

பலநோக்குக்கூட்டுறவுச் சங்கங்களுக்கு போஷாக்குணவு நிலுவை வழங்க ஏற்பாடு

Niroshini   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்தில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய்மாருக்கான போஷாக்குணவு நிலுவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களினூடாக சகல கர்ப்பிணித் தாய்மாருக்கும் மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான போஷாக்குணவு வழங்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் வரை இதற்கான நிலுவை திருகோணமலை மாவட்டப் பலநோக்குக்கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்க வேண்டியிருந்த நிலையில், ஓகஸ்ட் மாதத்துடன் போஷாக்குணவு வழங்குவதை இடைநிறுத்துமாறு பலநோக்குக்கூட்டுறவுச் சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது

இதனால், கர்ப்பிணித் தாய்மார் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இதேவேளை, பலநோக்குக்கூட்டுறவுச் சங்கங்கங்களும் பிரதேச செயலாளர்களுக்கு நிலுவை கோரி அழுத்தங்களைக் கொடுத்து வந்தன.

இந்த விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டாரவின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து,ஜுன், ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களுக்கான நிலுவையை வழங்குவதற்கான நிதி மாவட்ட செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .