2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பல்கலைக்கழக மாணவனைத் தாக்கிய சக மாணவர்களுக்கு விளக்கமறியல்

அப்துல்சலாம் யாசீம்   / 2019 மார்ச் 17 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில், வியாபார முகாமைத்துவப் பிரிவு மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சக இரண்டு மாணவர்களும், எதிர்வரும்  21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ. எம்.அப்துல் முஹீத் வாசஸ்தலத்தில், அவரது முன்னிலையில், நேற்று (16) முன்னிலைப்படுத்திய போதே, நீதவான், இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அதே பல்கலைக்கழகத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி, வெல்லாவெளிப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மாணவர்களே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளன​ர்.

கடந்த 12ஆம் திகதியன்று, பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலையில் வைத்து, மூதூர் - நெய்தல் நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முஹம்மட் அப்ராஸ் என்ற மாணவனைத் தாக்கியதாக, நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டையடுத்து, மேற்படி மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன் தொடர்ந்தும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நிலாவெளிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X