Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஏப்ரல் 08 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்க திருகோணமலை அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நல்லூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அண்மையில் தங்களின் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை குறித்து கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து நல்லூர் பிரதேசத்தை ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டு, வெளி ஆக்கிரமிப்பாளர்களால் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவது குறித்து ஆராய்ந்துள்ளதுடன் பழங்குடியின மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் .
இதன்பின் அவர்களின் பிரச்சினைகளை ஆராயவும், பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் உடனடியாக குழுவொன்றை நியமிக்குமாறு திருகோணமலை அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் .
நூருல் ஹுதா உமர்
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago