தீஷான் அஹமட் / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீீஷான் அஹமட், எஸ்.எல்.நௌபர்
மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட தோப்பூர் வாராந்த சந்தையில், மூதூர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினர் இன்று (03) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, பழுதடைந்த மரக்கறிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தையில், காலாவதியான, பாவனைக்குதவாத உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக,மூதூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் பிரகாரம், மூதூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மியின் வழிகாட்டலின் கீழ் இச்சுற்றிவளைப்பு வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பாவனைக்குதவாத ஒருதொகை மரக்கறிகள் கைப்பற்றப்பட்டதாகவும் ஏனைய சில வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் மூதூர் சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.ஐ.றினூஸ் தெரிவித்தார்.
33 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago
1 hours ago