2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

பஸ் சேவை ஆரம்பம்

தீஷான் அஹமட்   / 2018 ஒக்டோபர் 20 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபையின், மூதூர் சாலையினால் தோப்பூரிலிருந்து திருகோணமலைக்கான புதிய பஸ் சேவை  இன்று (20) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

காலை 5.30 மணிக்கு தோப்பூரிலிருந்து மூதூர், கிண்ணியா ஊடாக பஸ் திருகோணமலையைச் சென்றடையும். மீண்டும் திருகோணமலையிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு தோப்பூரை வந்தடையும்.

திருகோணமலையிலுள்ள அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமை புரிவோரது நலனை கருத்தில் கொண்டு பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அறூஸ், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்கள், மூதூர் சாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .