2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பாடசாலை அதிபரை இடமாற்றுமாறு ஆர்ப்பாட்டம்

Editorial   / 2022 ஜனவரி 31 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை, மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட ஆலிம்சேனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி, பாடசாலையின் முன்பாக இன்று (31) காலை 07 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை  பெற்றோர்கள், பழைய மாணவர்கள், சங்கங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நடத்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், " 16 வருடங்கள் தாண்டியும் அதிகர் பதவி வகிக்க இது மன்னராட்சியா?”, “16 வருடங்கள் அதிபராக இருந்து இவர் சாசித்தவை என்ன?” மற்றும் “கல்வி அதிகாரிகளே அதிபரிடம் இருந்து எமது பாடசாலையை மீட்டுத் தாருங்கள்” உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு இதன்போது கோஷமிட்டனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வரா நளீம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் அதிபரை மாற்றுவதாக வாக்குறுதி வழங்கியதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X