2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாடசாலைகளுக்கு இம்ரான் எம்.பி திடீர் விஜயம்

Freelancer   / 2022 ஒக்டோபர் 13 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளுக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இம்ரான் மஹ்ரூப்  திடீர் விஜயம் மேற்கொண்டு பாடசாலைகளின் தேவைகளையும் கேட்டறிந்தார்.

கிண்ணியா மத்திய கல்லூரி தேசிய பாடசாலை , அல் ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம், நடுத்தீவு அல் இக்பால் ஆகிய பாடசாலைகளுக்கு விஜயம் செய்துள்ளார். 

கிண்ணியா மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்து ஓய்வுபெறும் அதிபர்  எஸ்.எம். அனிபா சேவைகளை பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

கிண்ணியா அல்-ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த பொழுது தங்கள் பாடசாலையில் உயர்தர விஞ்ஞான பிரிவினை ஆரம்பிப்பதற்கான அனுமதியினை பெற்றுத்தருமாறு அதிபர் ஜனாப். எம்.எஸ். நசூர்தீனால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அடுத்ததாக கிண்ணியா நடுத்தீவு அல் இக்பால் வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த பொழுது அப் பாடசாலை  தரம் 09 வரையுள்ளதாகவும் அடுத்த ஆண்டிலிருந்து க.பொ.த  சாதாரண தர வகுப்புகளை ( 10,11 ) நடத்துவதற்குரிய அனுமதியினை பெற்றுத்தருமாறு பாடசாலை அதிபர் முகம்மட் உவைஸ் அவர்களால் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கோரிக்கைகளை ஏற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்  இம்ரான் மகரூப் கிண்ணியா நடுத்தீவு இக்பால் வித்தியாலயம், கிண்ணியா அல் ஹிரா மகா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலை அதிபர்களாலும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்  மிக விரைவில் நிறைவேற்றி தருவதாக பாடசாலை அதிபர்களிடம் வாக்குறுதியளித்தார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .