2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பாதுகாப்பு வேலி அமைக்குமாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், பொன்ஆனந்தம், எப்.முபாரக் 

மூதூர், பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இறால்குழி, நாவலடி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மூதூர் பிரதேச செயலகத்துக்கு முன்பாக கோஷங்களை எழுப்பி இன்று (17) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த கிராமங்களுக்குள் உட்புகும் காட்டு யானைகள் பயிரினங்கள், குடியிருப்பு வீடுகளைத் துவம்சம் செய்வதாகவும் இரவு வேளைகளில் தாம் அச்சத்துடனே உறங்குவதாகவும் தெரிவித்தும், இதனை கருத்தில்கொண்டு, தமது கிராமத்தை சுற்றி யானை பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது, ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகைத்தந்த மூதூர் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் எம்.அரபாத்திடம், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் அவர்கள் கையளித்தனர்.

இந்த விடயம் தொடர்பாக, பிரதேச செயலாளரிடம் அறிவிப்பதாகவும் யானை வேலி அமைப்பது தொடர்பில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X