2025 மே 05, திங்கட்கிழமை

பாம்பு தீண்டியதில் சிறுவன் வைத்தியசாலையில்

Princiya Dixci   / 2021 மே 16 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பகொட்ட  பகுதியில் வீட்டுக்கு முன்னால் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, புடையன் பாம்பு தீண்டிய சம்பவமொன்று,  இன்று (16) காலை பதிவாகியுள்ளது.

சிறுவன் மயக்கமுற்ற நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

திருகோணமலை, கம்பகொட்ட பகுதியைச் சேர்ந்த தேவிந்த பிரசாந் (10 வயது) எனும் சிறுவனையே இவ்வாறு பாம்பு தீண்டியுள்ளது.

சிறுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X