2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பாலத்தைப் புனரமைக்க கையெழுத்து வேட்டை

Editorial   / 2021 நவம்பர் 14 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கட்டைபறிச்சான் தெற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள இறால் பாலத்தை புனரமைக்கும் பொருட்டு, பொதுமக்களின் கையெழுத்து திரட்டப்பட்டு வருகின்றது.

சில தினங்களுக்கு முன்னர் இப்பாலத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் முதியவர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், மாடுகள் இரண்டு உயிரிழந்துள்ளன.

இவை தொடர்பில் இதுவரை எந்த அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வருகைதந்து பார்வையிடவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுதப்பட்ட மகஜரிலேயே பொதுமக்கள் கையொப்பமிட்டு வருகின்றனர்.

இறால் பாலத்தினூடாக பயணிக்கும் அனைவரும் இம்மகஜரில் ஆர்வத்துடன் கையொப்பங்களை இட்டுவருகின்றனர்.

நேற்றைய தினம் சம்பவ இடத்துக்கு விரைந்த கட்டைபறிச்சான் வட்டார பிரதேச சபை உறுப்பினர் ந.கரிஹரகுமார், பிரதேச சபைத் தவிசாளரின் உதவியுடன் பொதுமக்களுடன் இணைந்து பாலத்தை அடையாளப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X