Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
ஒலுமுதீன் கியாஸ் / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமரின் ஆசிர்வாதம் இல்லாமல் எவரும் ஜனாதிபதியாக முடியாதெனத் தெரிவித்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், நாட்டில் யார் ஜனாதிபதியாக வருவது என்றாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆசிர்வாதத்தால் மாத்திரமே அது சாத்தியமாகுமென்றார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு யார் என்று தெரியாத மைத்திரிபால சிரிசேனாவை ஜனாதிபதியாக்கியமை இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகுமெனவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்துக்கான காபர்ட் வீதி வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம், மூதூர் நேற்று முன்தினம் (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி , ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதால் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டுமென்றார்.
அத்துடன், தற்போது ஜனாதிபதி வேறு திசையில் சென்றாலும் மக்களின் நலனுக்காகவும் தேசத்தின் சுபீட்சத்துக்காகவும் தூர நோக்கோடு, அரசியல் மயமாக்கலுக்கு அப்பால் பிரதமர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்த அவர், இதனை நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென்றார்.
இதேவேளை, தோப்பூர் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தும் நடவடிக்கையைத் தொடர்ந்து செய்துவருவதாகவும் அடுத்த வருடம் அமையப் போகின்ற புதிய ஆட்சியில் தோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் அமையுமெனவும், இம்ரான் எம்.பி மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago