2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பிள்ளையார் கோவிலின் வருடாந்த அலங்கார உற்ஷவம்

Editorial   / 2019 ஜூலை 21 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அ . அச்சுதன்  

திருகோணமலை அருள் மிகு ஸ்ரீ இரத்தினசிங்க பிள்ளையார் கோவிலின் வருடாந்த அலங்கார உற்ஷவம்   இன்று திங்கள்கிழமை ஆரம்பமாகி 31-07-2019 புதன்கிழமை வரை அலங்கார உற்ஷவம் நடைபெறவுள்ளது.

ஆடி அமாவாசை தினமான புதன்கிழமை (31) காலை 5.00 மணிக்கு எல்லாம் வல்ல விநாயகப்பெருமான் திருகோணமலை  கடற்கரையில் தீர்த்தமாடல் முடிந்து பகல் 10.00 மணிக்கு விஷேட அபிஷேக பூஜை இடம் பெற்று, மாலை 5.00 மணிக்கு விஷேட ஊஞ்சல் தண்டிகை உற்ஷவம் நடைபெறும்.

உற்ஷவ காலங்களில் தினமும் காலை 7.00 மணிக்கு அபிஷேகம்,  பூஜை நடைபெற்று காலை 9.00 மணிக்கு பூஜைகள்  நிறைவடையும்,  மாலை 3.30 மணிக்கு அபிஷேகமும், 4.30 மணிக்கு மூலஸ்தான பூஜையும் தொடர்ந்து வசந்தமண்டப விஷேட தீபாராதனை பூஜையும் இடம் பெற்று எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் உள் வீதி வலம் வருவார்,  மாலை 7.00 மணிக்கு உற்ஷவம் நிறைவடையும்.

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோவிலின் ஆதீனகர்த்தா வேதாகமமாமணி சிவஸ்ரீ சோ. இரவிச்சந்திர குருக்கள் அவர்களின் தலைமையிலும் நல்லாசியுடனும் திருவிழா நடைபெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .