2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

புது முறையில் மீன்கள் உலரவைப்பு

தீஷான் அஹமட்   / 2018 நவம்பர் 07 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது பருவமழை பெய்து வருவதால், மூதூர் பிரதேச மீனவர்கள் தாங்கள் பிடிக்கின்ற மீன்களை, பரண்களில் உலரவைக்க முடியாமையால், வித்தியாசமான முறையில் மடுவு (பள்ளம்) வெட்டி, அதனுள் மீன்களை உலர வைத்து  வருகின்றனர்.

மீன்களை காய வைக்கும் பரண் அமைப்பதற்கு இடம் தட்டுப்பாடாக இருப்பதால், இவ்வாறு பள்ளம் தோண்டி புதைத்து மீன்களைக் காயவைப்பதாகவும் மடுவில் உப்பு இட்டு புதைக்கப்பட்ட மீன்களை, மூன்று நாட்களுக்கு பின் எடுத்து சிறிது நேரம் வெயிலில் இட்டால் மீன்கள் நன்றாக காய்ந்து விடுமெனவும் மூதூர் பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X