2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்டச் சென்ற எழுவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 21 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட் 

திருகோணமலை-மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர- ஆண்டியாகல பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில், புதையல் தோண்டச் சென்ற 07 சந்தேக நபர்களை இன்று (21) அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்துள்ளதாக, மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில், 06 பேர் களுத்துறை, தொடங்கொட, தெஹியோகித ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் திருகோணமலை -திவுல்வெவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, இவர்களிடமிருந்து ஜெக்னேட்டர் வெடிமருந்து 400 கிராம், துளையிடுவதற்கு பயன்படுத்தப்படும் றில் மெசீன் 01, பூசை உபகரணங்கள் போன்றனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள், காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உலாவுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சுற்றி வளைப்பினை மேற்கொண்ட போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதாக சந்தேக நபர்கள், மொறவெவ பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் குறிப்பிட்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X