2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

புதையல் தோண்டிய 13 பேர் கைது

Editorial   / 2024 ஏப்ரல் 12 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் 13 பேரை  சந்தேகத்தின் பேரில் வியாழக்கிழமை (11)  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் ரத்னபுர,   கேகாலை மற்றும் தெவனிபியவர பகுதிகளில் வசித்து வரும் 21 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட  13 பேரில் நான்கு பேர் மொரவெவ பொலிஸ் பிரிவில் வசித்து வருபவர்கள் எனவும் பெண்ணொருவர் அடங்குவதாகவும், whatsapp ஊடாக புதையல் தொடர்பில் புகைப்படங்கள் பரிமாரப்பட்டமை தெரிய வந்துள்ளதாகவும் குறித்த வேனில் பயணித்தமை தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ தெரிவித்தனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் தனித்தனியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X