Editorial / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் 08 சந்தேகநபர்களை, இன்று (04) அதிகாலை கைது செய்துள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், கந்தளாய், மாத்தறை, கண்டிப் பகுதிகளைச் சேர்ந்த 25, 30, 40, 45 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை, திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .