2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

‘புனரமைப்பை விரைவுபடுத்துக’

Princiya Dixci   / 2021 ஜூலை 13 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட  வடலிக்குள கிராம  பொதுச் சந்தைக் கட்டடம் நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, பகுதியளவில் சேதமடைந்து காணப்படுகின்றது.

அத்தோடு, சுற்றிப்பகுதி பற்றைக்காடுகளாகவும் காணப்படுகின்றது.

இதனைப்   புனரமைத்துத்  தருமாறு, குச்சவெளி பிரதேச சபையின்  தவிசாளர் ஏ.முபாறக்கிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய,  தவிசாளரின் முயற்சியின் காரணமாக, சந்தைக் கட்டடத்தைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எம்.எஸ்.தௌபீக்கின் பன்முகப்படுத்தப்பட்ட  நிதியிலிருந்து இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டுமென, பொதுமக்கள் வேண்டிநிற்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X