2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பெண்கள் உரிமைகள் குறித்த கலந்துரையாடல்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 06 , பி.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீட்

திருகோணமலை மாவட்டத்தில் பெண்களின் சுய தொழில் முயற்சியான்மை மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பிலான கலந்துரையாடல்கள், மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் நேற்று (05) இடம்பெற்றன.

இக்கலந்துரையாடல்கள், ஜனநாயக இடதுசாரி முண்ணனியின் திருகோணமலை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மஹ்ரூப் றைசா தலைமையில் இடம்பெற்றன.

முள்ளிப்பொத்தானை, 4ஆம் கட்டை, வெள்ளைமணல் உள்ளிட்ட பகுதிகளில் இவை நடைபெற்றதுடன், எதிர்காலத்தில் பெண்களின் சுயதொழில் விருத்திகளை மேற்கொள்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இதில் மகளிர் அணி தலைவி மஹ்ரூப் ரைசா மற்றும் பெண்கள் அணியினர் என பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X