பொன் ஆனந்தம் / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - புல்மோட்டை, அரிசிமலை பொதுமக்களின் காணி அபகரிப்புக்கு எதிரான வழக்கு, அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதிக்கு, திருகோணமலை மேல் நீதிமன்றத்தால் நேற்று (04) ஒத்திவைக்கப்பட்டது.
அரிசிமலைப் பிரதேச பொதுமக்களுக்குரிய காணியை, தொல்பொருள் திணைக்களத்தினரும் பௌத்த நிர்வாகத்தினரும் இணைந்து முறைகேடாக அபகரித்ததாக, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பாக, மேல் நீதிமன்றத்தில், கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதியன்று, மேற்படி வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு, மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளம்செழியன் முன்னிலையில் நேற்றுக் காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதிக்கு, ஒத்திவைக்கப்பட்டது.
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago