Freelancer / 2023 நவம்பர் 01 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
தம்பலகமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயில்தீவு, ஆறாம்வாய்க்கால் முதலான பகுதிகளில் வேளாண்மை செய்கைக்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.
உழுதுதல்,விதைத்தல், வரம்பு சீராக்கள் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருதோடு இப்பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்கையை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும்,இப்பெரும் போகத்துக்கான உரம்,பசளை இன்னும் வழங்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இருந்தபோதிலும் கமநல சேவைகள் நிலையத்தின் மூலம் அவற்றை வழங்குவதாகவும் இப்பசளைகளை உரிய காலத்துக்குள் வழங்குமாறு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு விழங்காவிட்டால் கடந்த காலங்களில் நோய் ஏற்பட்டதைப் போன்று இம்முறையும் நஷ்டம் ஏற்படும் எனவும் உரிய காலத்துக்குள் பசளை எண்ணையைத் தந்து எங்களுடைய விவசாயத்தை கடந்த காலங்களைப் போன்று பாதிப்புகள் ஏற்படாமல் இம்முறையாவது விளைச்சல் கிடைப்பதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

3 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025