Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2021 ஜூன் 10 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
எம்.பி எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல், இலங்கை நாட்டு கடற் பரப்புக்குள் வருகை தந்து தீப்பற்றி எரிந்தமையால், மீன் இனங்கள் அழியக் கூடியதாகவுள்ளன.
“இதனால் மீனவச் சமூகமும் பாதிப்பை எதிர்நோக்குகின்றது” என, திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச மீனவ சங்கங்களின் சமாஜத் தலைவர், ஏ.ஆர்.பாயிஸ் கிண்ணியாவில், நேற்று (09) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
எமது நாட்டிலுள்ள விலை மதிக்க முடியாத மீனினங்கள், ஆமைகள், டொல்பின்கள் இதன் விளைவாக மரணித்து கொண்டிருக்கிறன என்பதை, சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரசாயனப் பொருள்களை உட்கொள்ளும் மீன்களைப் பிடித்து மீனவர்கள் விற்பனைச் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனை, கொள்வனவு செய்து எமது மக்கள் உட்கொள்வதால், புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக, மக்கள் அச்சம் கொள்கின்றனர் என்றார்.
“வெள்ளம், புயல், டெங்கு, கொரோனா போன்றவற்றால் மீன்களுக்கான சரியான விலை கிடைக்காமல் மீனவர்கள் ஏற்கெனவே, பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஹிக்கடுவை முதலான பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்படவுள்ளதோ, அது போன்று திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.
எக்ஸ் பிரஸ் பேல் கப்பலில் இருந்து இரசாயனம் அகற்றப்படும் வரைக்கும், மீனவர்களுக்கு வாழ்வாதார நிவாரணங்களை அரசாங்கம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர், .
மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன், என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியும் ஒன்றும் நடக்கவில்லை எனத் தெரிவித்த ஏ.ஆர்.பாயிஸ் வடக்கில் மீனவர்களுவர்களுக்கு கொடுக்கின்ற அக்கறை கிழக்கு மாகாண மீனவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றார்.
M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago