2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸாரை தாக்கியவர் விளக்கமறியலில்

Editorial   / 2017 டிசெம்பர் 29 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததோடு,பொலிஸார் இருவரை தாக்கி காயப்படுத்திய நபரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.முஹித் நேற்று(28) உத்தரவிட்டார்.  

திருகோணமலை நீதிமன்ற பதில்  நீதிவான் முன்னிலையில் நேற்று(28) ஆஜர்படுத்திய போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மகமாயபுர,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                       

                  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X