Princiya Dixci / 2021 ஜூலை 22 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்த போட்டிப் பரீட்சையை மீண்டும் நடத்துமாறு, கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக எச்.என்.டி ஆங்கில உயர் டிப்ளோமா பட்டம் பெற்ற மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரீட்சையே இவ்வாறு மீண்டும் நடத்தப்படவுள்ளது.
முன்னர் நடத்தப்பட்ட பரீட்சையின் போது, வினாத்தாள்கள் வெளியிடப்பட்டதாக மாணவர்கள் அளித்த முறைப்பாடுகளுக்கு அமைய, அறிக்கையை பரிசீலித்த பின்னர், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து வினாத்தாள் கசிந்ததாக வந்த முறைப்பாடுகளை பரிசீலித்த பின்னர், முறையான விசாரணைகளை நடத்த ஆளுநர், சி.ஐ.டிக்கும் உத்தரவிட்டிருந்தார்.
எனவே, புதிதாக மீண்டும் பரீட்சையை நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு 2021 அக்டோபர் 15ஆம் திகதிக்கு முன் நியமனங்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்குமாறும் மாகாண பொது சேவை ஆணைக்குழுவுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்ததப் பரீட்சையை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எழுத்துப் பரீட்சையின் முடிவுகள் 10.09.2021 க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், நடைமுறை பரீட்சை அக்டோபர் முதல் வாரத்துக்குள் முடிக்கப்பட்டு ஒட்டுமொத்த முடிவும் வெளியிடப்பட வேண்டும் என்றும் மாகாண பொது சேவை ஆணையகத்துக்கு ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
54 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago
7 hours ago