Princiya Dixci / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காந்தி நகர் பகுதி இளைஞன் ஒருவரை, அநுராதபுரச் சந்தியில் வைத்து போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோய்னுடன் நேற்று (12) கைது செய்துள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பிலேயே இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 23 வயதுடையவர் எனவும் இவரிடமிருந்து 600 போதை மாத்திரைகளும் 4,250 மில்லிகிராம் ஹெரோய்னும் மீட்கப்பட்டதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago