அப்துல்சலாம் யாசீம் / 2017 டிசெம்பர் 02 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பாலத்துக்கருகில் 90 போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை டிசெம்பர் மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், பெரிய கிண்ணியாவைச் சேர்ந்த அப்துல்காதர் அமானுல்லாஹ் (37 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தார்.
கிண்ணியா பாலத்துக்கருகில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.எம்.பீ.பீ.விஜயசிறி தலைமையில் பொலிஸார் சோதனையிட்ட போது, 90 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
37 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago