2025 மே 14, புதன்கிழமை

போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் சிக்கினார்

Yuganthini   / 2017 ஜூன் 07 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்

விற்பனைக்குத் தடை செய்யப்பட்ட 126 போதை மாத்திரைகளுடன், சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று, இன்று (07) இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா, றியாத் நகரைச் சேர்ந்த 27 வயதுடைய மேற்படிச் சந்தேகநபர், குறித்த போதை மாத்திரைகளை, கிண்ணியாவில் இருந்து திருகோணமலைக்கு எடுத்துச்சென்றுகொண்டு இருந்தபோதே கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் கூறினர்.

அத்துடன், அவரிடமிருந்து, 5 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாப் பொதியொன்றும் கைப்பற்றப்பட்டதாக, திருகோணமலை பொலிஸின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜோன்சன் தெரிவித்தார்.

இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, அவரை திருகோணமலை பொலிஸ் தலைமையகத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, அவர்கள் முன்னெடுத்துள்ளதாகவும் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .