Princiya Dixci / 2021 மார்ச் 24 , பி.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிழக்கு மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறப்படுவது குறித்து நியாயமான விசாரணை நடத்துவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உறுதியளித்துள்ளார்.
முன்னதாக குறித்த பரீட்சையில் இடம்பெற்றுள்ள அநீதிக்கு எதிராக ஆளுநரிடம் மகஜர் ஒன்றை மாணவர்கள் கையளித்தனர். அத்துடன், ஆளுநரை சந்திக்கக் கோரி, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் இம்மாதம் 22ஆம் திகதி போராட்டம் ஒன்றையும் நடத்தினர்.
இதன்போது, கொழும்பில் இருந்த ஆளுநர் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக மாணவர்களை தொடர்புகொண்டு, அவர்களின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படுமென உறுதியளித்தார்.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு, கிழக்கு மாகாணத்தில் நியமனங்கள் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஆளுநரிடம் மாணவர்கள் இதன்போது கேட்டுக்கொண்டனர்.
மேலும், இந்தத் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வயது எல்லையை 40ஆக உயர்த்தவும், ஆங்கில ஊடகத்தில் பிற பாடங்களைக் கொண்ட பட்டதாரிகளுக்கு ஆங்கில ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதை நிறுத்தவும் ஆளுநரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்தே, இதன் உண்மைகளின் அடிப்படையில் எதிர்கால ஆட்சேர்ப்புக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு, மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்.
8 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Nov 2025
16 Nov 2025