2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’பௌத்த மயமாக்கலின் உச்ச கட்டம்’

Freelancer   / 2023 மே 08 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

பயங்கரவாத யுத்தத்தினாலும் பொருளாதார அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு வாழ் மக்கள் மீது பௌத்த மேலாதிக்கமும் தலை விரித்தாடுகின்றது என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட பள்ளி வாசல்கள் சம்மேளன செயலாளருமான எம்.எம்.மஹ்தி குற்றஞ்சாட்டினார்.

திருகோணமலை மீடியா போர ஊடக மையத்தில்? இன்று (08) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வட, கிழக்கு வாழ் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் காணிகள் பல்வேறு வடிவங்களில் கபலிகரம் செய்யப்படுகின்ற விடயத்தை நாங்கள் நேரடியாக கண்டு கொண்டிருக்கிறோம்.

“தொல்பொருள் பாதுகாப்பு, புனித பிரதேச பிரகடனம், இராணுவ முகாம், குடியேற்றம் மற்றும் பௌத்த கோவில்கள் அமைப்பு  என பல்வேறு வடிவங்களில் சிறுபான்மை மக்களின் காணிகள் கையாக படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

“பல்லின மக்கள் வாழுகின்ற இந்த நாட்டிலே, அனைத்து மக்களும் சமத்துவத்தோடு வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டிய இத் தருணத்தில், சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களுடைய காணிகள் மீதும் தொடர்ந்தும் இவ்வாறான கையாகப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

“இது இந்நாடு பொருளாதாரத்தால் மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாகும். சர்வதேச நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப் படுகின்ற அபாயத்தை ஏற்படுத்தலாம்” என அச்சம் வெளியிட்டார்.

எனவே, இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இருந்து சிறுபான்மை சமூகத்தையும் அவர்களுடைய உரிமைகளையும் காணிகளையும் கையகப்படுத்துகின்ற முயற்சிகளை தடுத்து நிறுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .