2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முச்சக்கரவண்டியைத் திருடிய இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

முச்;சக்கரவண்டியொன்றை திருடிச்சென்று அதன் உதிரிப்பாகங்களை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 16, 18 வயதுகளையுடைய இருவரை இம்மாதம் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, நேற்று உத்தரவிட்டார்.

நிலாவெளி, கோபாலபுரம் பகுதியில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியே திருட்டுப் போயுள்ளது.
 
இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், விசாரணையை முன்னெடுத்த பொலிஸாருக்கு முச்சக்கரவண்டியொன்றின் உதிரிப் பாகங்கள் களறப்படுவதாகத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று சந்தேக நபர்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், உதிரிப்பாகங்களையும் கைப்பற்றியுள்ளனர்.   
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .