Suganthini Ratnam / 2016 ஜனவரி 21 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
சட்டவிரோதமான முறையில் திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்திலிருந்து கொழும்புக்கு லொறியொன்றில் மூன்று மாடுகளை கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் இருவரை புதன்கிழமை (20) மாலை பொலிஸார் கைதுசெய்தனர்.
வீதிப் போக்குவரத்து பொலிஸார் குறித்த லொறியை இடைநிறுத்தி சோதனையிட்டபோது, மூன்று மாடுகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லொறியின் சாரதியையும் உதவியாளரையும் கைதுசெய்ததுடன், அம்மாடுகளையும் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
லொறியும் மாடுகளும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
16 minute ago
32 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
1 hours ago
2 hours ago