Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
அனுமதிப்பத்திரமின்றி மாடொன்றை லொறியில் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் 02 பேரை திருகோணமலை, குச்சவெளிப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டைப் பிரதேசத்திலிருந்து அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேசத்துக்கு லொறியில் கொண்டு சென்றுகொண்டிருந்த 13 மாடுகளில் 12 மாடுகளுக்கு அனுமதிப்பத்திரம் காணப்பட்டதாகவும் ஒரு மாட்டுக்கு அனுமதிப்பத்திரம் இல்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த லொறியை வழிமறித்துச் சோதனையிட்டபோது, இது தொடர்பில் தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago