2025 மே 23, வெள்ளிக்கிழமை

மோட்டார் குண்டுகளை செயலிழக்கச் செய்யுமாறு உத்தரவு

Gavitha   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹூஸைன்

திருகோணமலை மாவட்டம், சம்பூர் பிரதேசத்திலுள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட  வெடி குண்டுகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யுமாறு, மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை (05) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள குடும்பங்கள், அவர்களுடைய காணிகளை துப்பரவு செய்துக்கொண்டிருக்கும் போது, அங்கிருந்த கிணறு ஒன்றுக்குள் இருந்து 60 மில்லிமீற்றர் ரக 44 மோட்டார்கள் குண்டுகள் இருப்பதை கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) அவதானித்துள்ளனர்.

இதன் பின்னர் மோட்டார் குண்டுகளை மீட்ட பொலிஸார், நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை முன்வைத்துள்ளனர். இதன்பிரகாரம், சாத்தாபுர விசேட அதிரடிப்படை முகாம் வெடிபொருள் செயலிழப்பு பிரிவு மூலம் குறித்த மோட்டார் குண்டுகளை செயலிழக்கச் செய்யுமாறு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தையடுத்து மீள்குடியேறியுள்ள பகுதிகளிலுள்ள கிணறுகளில் இதுபோன்ற வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருவதாகவும் இதனால் பிரதேசங்களிலுள்ள கிணறுகளை துப்பரவு செய்வதற்கு மக்கள் தயக்கம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X