Niroshini / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் அனுசரணையுடன் மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் சட்டங்களும் பாதுகாப்பு பொறிமுறையும் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் நூலக மண்டபத்தில் கல்லூரி அதிபர் எம்.எல்.எம். முபாறக் தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
இதில்,இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மூதூர் பிராந்திய சட்டத்தரணி எம்.எல்.பைஸர்,நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் கோபிகண்ணன் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இந்நிகழ்வில் 75க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினர்.
இதன்போது,சிறுவர் பாதுகாப்பு சட்ட ஏற்பாடுகள், போதைவஸ்து பாவனையில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கும் சட்ட ஏற்பாடுகள் மற்றும் குடும்ப வன்முறைகளின் போது சிறுவர் பாதுகாப்பு பொறிமுறையுடன் குடிசார் ஆவணங்களை பேணுவதில் மாணவர்களின் பங்களிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago