Niroshini / 2015 நவம்பர் 29 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி
பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பிரதேசத்திலுள்ள முதியோர்களை மகிழ்வூட்டும் நிகழ்வும் முதியோர்கள் சமூகத்தில் நடந்து கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து தெளிவூட்டும் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை செல்வநகர் பல்தேவை கட்டடத்தில், கிராம சேவையாளர் எஸ்.உபைதுல்லா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, சேருவில பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.டீ.பைசரினால் முதியோர்கள் சமூகத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் முதியோர்களின் கௌரவம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டன.
அத்தோடு செல்வநகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள மிகவும் வயது கூடிய முதியவரான மொஹமட் கச்சி மொஹமட், வயது கூடிய வயோதிபப் பெண்ணான எம்.மைமுனா உம்மா ஆகிய இருவரும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது, கலந்து கொண்ட முதியோர்களினால் நாட்டார் பாடல்கள்,கவிதைகள் போன்றனவும் அரங்கேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் செல்வகர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.சபீரா,கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எம்.அலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago