2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மூதூருக்குப் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மூதூருக்குப் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் நியமிக்கப்படுவார் எனக் கிழக்கு மாகாண  முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்தார்.

இது தொடர்பான கலந்துரையாடல் மாகாண முதலமைச்சருடன் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றபோதே, அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த வாக்குறுதி நிறைவேற்றுப்படாத பட்சத்தில் எதிர்ப்புப் போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறினார்.
மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரை உடனடியாக இடமாற்றக் கோரி கடந்த வாரமும்; செவ்வாய்க்கிழமையும் மூதூர் மற்றும் திருகோணமலை நகரிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

வலயக் கல்விப் பணிப்பாளர், அதிபர் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் பேசுதல், ஆசிரியர்களை தொழுகைக் கடமையைச் செய்யவிடாது தடுத்தல், கற்கக்கூடிய மாணவர்களுக்கே கற்பியுங்கள் என்று அசிரத்தையான உத்தரவிடல் போன்ற மூன்று பிரதான பிரச்சினைகளை மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் மீது முன்வைத்து  ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X