2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

முதிரை மரங்களை கொண்டு சென்றவர் விளக்கமறியலில்

Niroshini   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                   

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அனுமதிப்பத்திரமின்றி முதிரை மரங்களை கொண்டு சென்ற புல்மோட்டையைச் சேர்ந்த ஏ.ஆனந்தகுமார் (வயது 38) என்பவருக்கு இன்று வியாழக்கிழமை  ருகோணமலை நீதிமன்ற நீதிபதி கயான் மீககே ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

குறித்த நபர் 2013ஆம் ஆண்டு அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் புல்மோட்டைப் காட்டுப்பகுதியிலிருந்து புல்மோட்டை ஜின்னாபுரம் பகுதிக்குச் உழவு இயந்திரத்தில் முதிரை மரங்களை கொண்டு சென்ற போது புல்மோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்பு பிணை வழங்கப்பட்டது .

சந்தேக நபருக்கெதிராக வழக்கு திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை குறித்த சந்தேக நபரை குற்றவாளியாக இணங்கண்டு ஆறு மாதம் சிறைதண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிபதி கயான் மீககே உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .