Niroshini / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலத்தடிச்சேனை ஆசாத் நகர், ஜின்னாபுரம், ஸ்ரீநாராயணபுரம், முன்னம்புடிவெட்டை போன்ற கிராமங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் பல முறை தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
பகல் நேரத்தில் காட்டு யானைகள் பெருவெளிகுளத்துக்கு அருகில் உள்ள சிறு காட்டுப்பகுதிக்குள் நின்றுகொண்டு இரவு நேரத்தில் அட்டகாசம் செய்வதாகவும் இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார கூறுகையில்,
மாவட்டத்தில் கூடுதலான இடங்களில் யானைகள் அட்டகாசம் செய்து வருவதாக முறைப்பாடுகள் வந்தவண்ணம் உள்ளன.
இவ்வருட இறுதிக்குள் யானைகளின் தொல்லைகளிலிருந்து மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மாவட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 30 வீதமான பணத்தை யானை மின் வேலி அமைக்க ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026