2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மூதூரில் சுகாதாரத்துறை சார்ந்த வேலைத்திட்டங்கள்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 14 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் சுகாதாரத்துறை சார்ந்த பல்வேறு வேலைத்;திட்டங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி கிழக்கு மகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக  மாகாணசபை உறுப்பினர் ஜே.எம்.லாகீர் தெரிவித்தார்.

மூதூர் தள வைத்தியசாலையின் நோயாளர் விடுதியை  திறந்துவைக்கவுள்ளதுடன், கதிரியக்க (எக்ஸ்ரே) இயந்திரத்தையும் அவ்வைத்தியசாலைக்கு கையளிக்கப்படும். அத்துடன், மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கான விடுதிக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

மேலும், அரபா  நகரில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைக்கப்படவுள்ளது.

தக்வா நகரிலும் சாபி நகரிலும்  அமைக்கப்படவுள்ள கிராமோதய வைத்திய கட்டடங்களுக்கும் தோப்பூர் ஆயுர்வேத வைத்தியசாலைக் கட்டடத்துக்கும்  கிளிவெட்டி வைத்திய விடுதிக்கும் அடிக்கற்கள்  நாட்டப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X