2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

மூதூரில் புதிய நீதிமன்றக் கட்டடம்: ஜனாதிபதியால் திறக்கப்படும்

Princiya Dixci   / 2016 ஜூலை 29 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம்

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் நகரில் புதிய நீதிமன்றக் கட்டடமொன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் 3.00 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் அப்துல்லா மஹ்ரூப் எம்.பி. தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

குறித்த நீதிமன்றக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு சுமார் 39 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவைளை, திருகோணமலை கச்சேரியில் காணிப்பிணக்குகளைத் தீர்பதற்கான இணக்கசபை குழுவுக்கான பிரநிதிகள் நியமனம், இன்று (29) காலை, நீதியமைச்சரினால் வழங்கப்பட்டன.  

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பிரதிகள் இதன்போது நியமனங்களை பெற்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைவராக முன்னாள் கிழக்கு மாகாண காணி ஆணையாளர்  க. குருநாதன் தெரிவாகியுள்ளார்.

இக்குழு, எதிர்காலத்தில் காணி சார் பிணக்குகளைத் தீர்க்க  முயற்சிகளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .