Suganthini Ratnam / 2015 நவம்பர் 13 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
மூதூர் வைத்தியசாலையின் ஆளணிப்பற்றாக்குறை வளப்பிரச்சினைகள் மற்றும் நோயாளர்களின் ஆரோக்கியத்துக்கான சிறந்த திட்டமொன்றினை முன்னெடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார சுதேசிய அமைச்சர் ஏ.எல்.எம்.நஸிருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிருக்குமிடையிலான சந்திப்பு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே அவர் வேண்டுகோளை விடுத்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் 'கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் பல வைத்தியசாலைகள் இருக்கின்றபோதிலும், மூதூர் வைத்தியசாலையில் பல்வேறு பிரச்சினைகளும் குறைபாடுகளும் உள்ளன. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில வைத்தியர்களும் ஊழியர்களும் கடமையாற்றுகின்றார்கள் அதனை அதிகரிக்க வேண்டும்' என்றார்.
இதன்போது சுகாதார அமைச்சரிடம் மாகாண சபை உறுப்பினர் மூதூர் வைத்தியசாலைக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago