2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி

Niroshini   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

அனுராதபுரம் ,கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிப்பாவ பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு மின்சாரம் தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தையான எஸ்.தௌபீக் (வயது 43)   என்பவர் உயிரிழந்துள்ளதாக கஹடகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வீட்டுக்கு செல்ல முற்பட்ட வேளையில் வீதியில் அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் கஹடகஸ்திகிலிய பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .