2025 மே 23, வெள்ளிக்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 18ஆம் திகதி கொடுப்பனவு

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா,வடமலை ராஜ்குமார்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் 3,537 பேருக்கு மாதாந்தம் மூவாயிரம் ரூபாய் படி  கொடுப்பனவை எதிர்வரும் 18ஆம் திகதி வழங்கவுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

அமைச்சில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 1,832 முன்பள்ளிகள் காணப்படுகின்றன. இவற்றில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுசரணையில் 351 பேர் கடமையாற்றி வருகின்றனர். முன்பள்ளி ஆசிரியர்கள் 98 பேர் அரசசார்பற்ற நிறுவனங்களின் கொடுப்பனவை பெறுகின்ற அதேவேளை, 78 ஆசிரியர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக கொடுப்பனவைப் பெறுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக முன்பள்ளி ஆசிரியர்கள் 4,064 ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில் தமிழ்மொழி மூலமாக 3,108 ஆசிரியர்களும் சிங்கள ஆசிரியர்கள் 956 பேரும் உள்ளனர். இவர்களில்; எவ்வித கொடுப்பனவையும் பெறாத 3,537 ஆசிரியர்கள் உள்ளனர்.  இந்த ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரையான நிலுவை கொடுப்பனவை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X