Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூன் 27 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் கடையொன்றை உடைத்து மூன்றரை இலட்சம் ரூபாய் பணத்தினைத் திருடிய சந்தேகநபரை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் கந்தளாய் நீதிமன்ற நீதவான் எச்.ஜி.தம்மிக்க, இன்று திங்கட்கிழமை (27) உத்தரவிட்டார்.
கந்தளாய் பிரதேசத்தில் கடந்த வாரம் இரண்டு அலைபேசிக் கடைகளும் இலத்திரனியல் கடைகளும் உடைக்கப்பட்டிருந்தன. இவைகளிலிருந்து மூன்றரை இலட்சம் ரூபாய் பணம் மற்றும் இதர இலத்திரனியல் பொருட்கள் திருடப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கடையுடைப்பு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கைதுசெய்து இன்று (27) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
31 minute ago
36 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago
1 hours ago
1 hours ago