2025 மே 19, திங்கட்கிழமை

மீளாய்வுக் குழுக் கூட்டம்

Thipaan   / 2016 ஜூலை 27 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு உடபட்ட வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் குழுக் கூட்டம், மாகாணப் பணிப்பாளரின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில்  நேற்று செவ்வாய்கிழமை (26) நடைபெற்றது.

எதிர்காலத்தில் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்திகள் பற்றியதும், பின்தங்கிய வைத்தியசாலை சிறந்த முறையில் வழிநடாத்துவது மற்றும் வைத்தியசாலைகள் உடாக மக்களுக்கு திருப்திகரமான சேவைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் போன்ற விடயங்களும் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏல்.எல் முஹம்மட் நஷீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அலுவலக அதிகாரிகள், செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X