2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

மக்களில் பிரச்சினைகளை தீர்க்க அலுவலகம் திறப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை,  மூதூர் பிரதேச  மக்களின் பிரச்சினைகளை இலகுவில் தீர்த்து வைப்பதற்காக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் அலுவலகம், நாளை 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  முற்பகல் 10 மணியளவில் மூதூரில் திறந்து வைக்கவுள்ளது.

பாலநகர் மையவாடிக்கு முன்னால் அமைந்துள்ள முன்னாள்  உதவி அரசாங்க அதிபர் ஆப்தீனது வீட்டிற்கு முன்னால் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளது.

இனிவரும் காலங்களில் குறைந்தது மாதத்தில் நான்கு  நாட்கள் குறித்த மூதூர் அலுவலகத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் தங்கியிருந்து பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கவுள்ளதால் பொதுமக்கள்  அத்தினங்களில் சமுகமளித்து தங்கள் பிரச்சினைக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .