2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மகஜர் கையளிப்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வடிவேல் சக்திவேல், எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எஸ்.எம்.யாசீம்

பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு மகஜரொன்றை புதன்கிழமை (23) கையளித்துள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டிடமே  இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், 'சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பெண்கள் மீதான  வன்முறைகளை இல்லாமல் செய்வதற்காக விழிப்புணர்வூட்டும் திட்டங்களை உள்ளூராட்சிமன்றங்கள் மற்றும் பாடசாலைகள் மூலம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

'சிறுவர் துஷ்பிரயோகத்துடனான கொலைகளுக்கு இலங்கையிலும் மரண தண்டனை நிறைவேற்றப்படுமாயின், இவ்வாறான சம்பவங்களை முற்றாக நிறுத்தலாம். எனவே, இனிமேலும் இவ்வாறான கொடூர சம்பவங்கள்; நாட்டில் இடம்பெறாமலிருக்க குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .