2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மக்களைப் பாதுகாக்க களத்தில் ஆளுநர்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், ஹஸ்பர் ஏ ஹலீம்

சீரற்ற வானிலையிலிருந்து கரையோர பொதுமக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராத யஹம்பத்,  திருகோணமலையின் வடக்குக் கடற்கரையில் உள்ள பல கிராமங்களுக்கு, இன்று (02)  காலை விஜயம் செய்து, பொதுமக்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

அதன்படி, 'புரெவி' புயலின் தாக்கத்தை எதிர்கொண்டிருந்த திருகோணமலை வடக்குக் கடற்கரைப் பகுதி, சிறிமாபுர மற்றும் திருக்கடலூர் கிராமங்களுக்கு ஆளுநர் விஜயம் செய்து, அங்கிருக்கும்  நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்

அவதானிப்பு சுற்றுப்பயணத்தின் நோக்கம், அந்த பகுதிகளில் வாழும் மக்களை சூறாவளியால் ஏற்படக்கூடிய பேரழிவுகளிலிருந்து முன்கூட்டியே மீட்பது மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை வழிநடத்துவதாகும்.

இதுபோன்ற பேரழிவு ஏற்படுவதற்கு முன்னர் மக்கள் எங்கிருக்கிறார்கள் என்று விசாரிக்க ஆளுநர் இப்பகுதிக்கு வருவது இதுவே முதல் முறையாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X