Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 நவம்பர் 20 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மசாஜ் நிலையம் நடத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரையும், தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்வதற்கு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேலு அனுமதியளித்தார்.
திருகோணமலை, உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை, இன்று (20) சுற்றிவளைத்தபோது, குறித்த பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டனரென, உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
உப்புவெளிப் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதீப் குமாரவின் ஆலோசனைக்கு அமைவாக, உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஏக்கநாயக்க தலைமையில் சென்ற குழுவினர், அலஸ் தோட்டம் பகுதியிலுள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை சுற்றிவளைத்தனர்.
இதன்போது, மசாஜ் நிலையம் நடத்துவதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி, அதாவது வைத்தியர் ஒருவர் இல்லாமல் ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை நடத்திச் சென்ற குற்றச்சாட்டில் குறித்த இரு பெண்களையும் கைது செய்ததாக, உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட கம்பளை மற்றும் தம்புள்ளைப் பகுதிகளைச் சேர்ந்த 33, 28 வயதுடைய மேற்படி பெண்களை, திருகோணமலை பதில் நீதவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்திய போதே, பிணையில் செல்ல பதில் நீதவான் அனுமதியளித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பதில் நீதவான் கட்டளையிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago